Augustin's Tamil Medical Magazine
புற்று நோய்க்கு முற்றுப் புள்ளி.
மருத்துவர் ப.உ.லெனின்.புதுவை.
புகைத்தல், புகையிலை போடுதல், மதுப்பழக்கம், முதலியவற்றால், வாய்ப்புற்று நோயால் அதிகம் பேர் பாதிக்கப் படுகிறார்கள். பெண்களில் கருப்பைப் புற்றுநோய் அதிக அளவில் உள்ளது. வறுமை, உணவுப் பற்றாக்குறை, நல்வழி இன்மை,போன்றவையும்;, புற்று நோய்க்கு மூலகாரணமாகிறது. எது எப்படி இருப்பினும் தொடக்க காலத்திலேயே ஆய்வுகள் செய்து கொண்டால், புற்று நோயை உடன் கண்டுபிடித்து தகுந்த மருத்துவம் மேற்கொண்டு அழிக்கலாம். புற்றுநோய் தொற்று நோயாக இல்லாமல் பலவகைப்பட்ட நோய்களின் கூட்டாகவே இருக்கின்றது.
புற்றுநோய்:-
இழைமயங்களில் (வளைளரந)ஒரு கலம் (உநடட) மட்டும் முறைப்படி பிளவு படாததால், புதுக்கலத்தை, உருவாக்குகிறது. இந்தக்கலம் மாறுபட்டதாக இருக்கிறது. இது அந்த உறுப்பின் கலத்திற்கான, வேலையை, செய்வதில்லை. இது தன் முதிர்ச்சியை அடையாத கலமாக மாறுகிறது.இது பிளவு பட்டு, பல இலக்கக்கணக்கான கலங்களாகப் பெருகி, புற்றுநோயாக மாறுகிறது.இதற்கு ஆங்கிலத்தில், கேன்சர் (உயnஉநச)என்று பெயர். தொடக்க காலங்களில், புற்றுநோய், எவ்வகையான தொந்தரவுமின்றி உண்டாவதால், இதனை அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. முற்றிய நிலையில், விரைவாகவும், உடல் முழுவதிலும், பரவி விடுகிறது. உடலின் எதிர்ப்பு ஆற்றலால் இதனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஊடுருவுதல், நிணநீர் வழி பரவுதல், இரத்தக் குழாய் வழி பரவுதல், போன்ற வழிகளால், புற்றுநோய் பரவி, இரத்தக்குழாய், நரம்பு, தசை, எலும்பு, நுரையீரல், கல்லீரல், மூளை போன்றவற்றிற்கு, பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் தொடங்கிய இடத்தை, வளர்ச்சியின் முதல் நிலை என்றும், உடலின் பல இடங்களுக்கு பரவி அழிப்பதை, இரண்டாம் நிலை என்றும் கூறுகின்றோம்.
கருப்பைப் புற்றுநோய்:-
கருப்பைப்புற்று நோயை தொடக்க காலத்திலேயே, கலங்களில் சிறிய மாற்றம் தெரியும் போதே -பாப்சிமியர்- முறையில் கண்டுபிடித்துவிடலாம். கருப்பைப் புற்றின் மூலகாரணம், சரிவரத்தெரியவில்லை. கருப்பைவாயை தூய்மையாகக் கழுவுவதன்மூலம் இதனைத்தடுக்கலாம்.
ஆண்கள், ஆண்குறியில் வெள்ளை அழுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்வதாலும், பெண்கள் கருப்பை வாயில், அழுக்கு தங்காமல் பார்த்துக்கொள்வதன்மூலமும் கருப்பைப் புற்றைத் தடுக்க முடியும். இந்தப் புற்றுநோய் குணமாக கருப்பையை, எடுத்துவிடலாம் என்று நேர் மருத்துவ (அலோபதி) முறையில் கூறுவார்கள். ஆனால் எல்லா வகையான, ஆய்வுகளின் முடிவைத் தெரிந்து கொண்டு,மாற்று மருத்துவ (ஹோமியோபதி) மருந்துகளை முறைப்படி சாப்பிடுவதன் மூலம், நோய் பரவாமல் தடுக்க முடியும். நோய் வந்த பின்னர், கருப்பையை எடுத்து விடாமலேயே குணப்படுத்த முடியும்.
மார்பகப் புற்றுநோய்.
முதலில் இது பெண்ணிற்கே தெரியாமல் வலியில்லாத சிறிய கட்டியாகத்தோன்றுகிறது. சிலசமயம் இரத்தக் கசிவும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண், தன் மார்பகங்களை ஆய்வு செய்வதன் மூலம், தொடக்கத்திலேயே, கண்டுபிடித்துக் குணப்படுத்திக் கொள்ளலாம். மார்பகங்களை இழக்கவேண்டிய தேவையுமில்லை. இந்தப்புற்று பெரும்பாலும், தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், இளம் கைம்பெண்கள், (விதவைகள்) இளம் வயதிலேயே மாதவிலக்கு அடைந்த பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவோர் போன்றவர்களுக்கு, வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் ஆற்றல் மிக்க மாற்று மருத்துவ (ஹோமியொபதி) மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முடியும்.
நுரையீரல் புற்று:
45 வயதுப் பொறியாளர் ஒருவர் தனக்கு சில ஆண்டுகளாகவே தொடர்சளித்தொந்தரவு இருப்பதாகக் கூறினார் பல மாதங்களாகவே குரலில் மாற்றமும் இருமலும் இருக்கிறது என்றார். காது மூக்குத் தொண்டை கலந்து புதிர்கதிர்ப் படம் இரத்த ஆய்வு செய்ததில் பீனிசமோ, கசமோ இல்லை என்றும், மருந்துகளைச் சாப்பிடும் போது நோய் குணமானதாகவும் பின் தொடர்ந்து, தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார். மூச்சுத் திணறல் பசியின்மை உடற் சோர்வு, அதிகமாக இருப்பதாகச்சொன்னார். நுரையீரற் புற்று அதிகமாக வெண் சுருட்டு குடிப்பவர்களுக்கும் வருவதாகக் கூறுவார்கள். ஆனால் இது புகைப் பிடிக்காதவர்களுக்கும் பெண்களுக்கும் வருகிறது. இந் நோயை, நுரையீரல் நோக்கி மூலம் அறிய முடிகிறது.உடல் மெலிவு அசதி; பசியின்மை, ஆகியவற்றிற்கு மருந்துகள் கொடுத்தேன். தொடர்ந்து மருந்துகளைச் சாப்பிட்டு வர 80 வீதம் குணமடைந்து விட்டார். விளுங்கும் போதும் அடைப்பு ஏற்பட்டாலும் அது வலி இல்லாமல் இருந்தாலும், இது உணவுக்குழாய்ப் புற்றுநோயின் முதற்கட்ட அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
மலக்குடல் புற்று.
இதை தொடக்க நிலையிலேயே உணர்வது மிகவும் கடினம். பொதுவாக இதை மூலம் என்றே கருதுவார்கள். மலம் கழித்தவுடன் இரத்தக் கசிவு, மலவாசலில் வலியும் எரிச்சலும் அரிப்பும் அதிகமாயும், அடிக்கடி மலச்சிக்கலும் இருக்கும்.இந்நோயை மூலம் என்று நினைக்காமல் உரிய ஆய்வுகளைச்செய்து நோயை விரைவில் குணப்படுத்த முடியும். இது போல் சிறுநீரில் தொடர்ந்து இரத்தக்கசிவும் அடைப்பும், உடலிழைப்பும், பசியின்மையும், மெல்லிய காச்சலும் இருந்தால், மருத்துவரை அணுகவேண்டும். சற்கரைநோய், ஈழைநோய், தொழுநோய், உடையவர்கள், புண்கள் வந்தால் அது வளர்ந்து, விரிந்து இருக்குமாயின், அதனை இழைய ஆய்வு மூலம் புற்று நோயா என அறிதல் வேண்டும்.
மஞ்சநோய் (மஞ்சட்காமாலை)
கணையப்புற்று அல்லது பித்தநீர்க்குழாய்ப்புற்று.
பொதுவாக பலவகைப்பட்ட நோய்நுண்ணி, (வைரசு)களாலும் குடிப்பழக்கத்தினாலும், ஏற்படக்கூடிய மஞ்சட்காமாலை சிலநாட்களில் மருந்துகள் சாப்பிடுவதால் சரியாகிவிடும். சரியாகாமல் வயிற்றுப்போக்கு, சுரம், நடுக்கம் மலம் வெள்ளையாகப் போதல் போன்றவை இருந்தால் உடன் கவனிக்கவேண்டும். இவை கணையப் புற்று, அல்லது பித்த நீர்க் குழாய்ப் புற்றாகவோ இருக்கலாம். தொடக்க காலத்திலேயே ஆய்வுகளைச்செய்து, மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். நோய் நுண்ணிகளாலும் குடிப்பழக்கத்தினாலும், ஏறு;படக்கூடிய மஞ்சணோய் நோய்க்கு மாற்று (ஹோமியோபதி) மருத்துவத்தில், மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. இவற்றுடன் உணவில் பத்தியங்கள் கடைப்பிடிப்பதின்மூலம், குணப்படுத்த முடியும். இரைப்பைப்புற்று, மலக்குடல் புற்று, கல்லீரல் புற்று, பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அநேகமாக வருகிறது. பசியின்மை, உடல் எந்தக் காரணமுமின்றி இளைத்துக்கொண்டே போவதும் அதிக சோர்வு ஏற்படும்.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
இரத்தப் புற்று நோய்.
1.எலும்புப் புற்று நோய். 2. நிணநீர் சுரப்பி புற்று நோய்.
இந்நோய்கள் எந்த வயதினருக்கும் வரலாம். காரணம் சரிவரத் தெரியவில்லை. இரத்தச்சோகை ஏற்பட்டு உடல் மெலிந்து, தளர்ந்து விடும். இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல், அதிகமாவதே இதற்குக் காரணமாகும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எலும்பு மச்சையை, மாற்றி வைத்து, அதன்மூலம், புதிய இரத்தத்தை உருவாக்கி, குணமாக்கலாம் என செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஆகும் செலவு மிக அதிகம். ஆனால் இத்தகைய மருத்துவ முறையிலும் உறுதி சொல்ல முடியாது. ஆனால் மாற்று (ஹோமியோபதி )மருத்துவம், அதிகரித்து வரும் வெள்ளை அணுக்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் நோயையும் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
மச்சப்புற்று:
மச்சங்களிலோ, மருக்களிலோ, ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
1.பரவுகின்ற மச்சம்.
2.புண்ணாகின்ற மச்சம்.
3.அடிப்பாகம் தடித்துக்கொண்டே இருக்கும் மச்சம்.
4.கறுத்துப்போகும் மச்சம். 5.பரவியும் நெறிகட்டியும் உள்ள மச்சம் இது தோல் புற்று எனப்படும்.
கட்டிகள்.
இவற்றில் இருவகையுண்டு.
1.தீங்கற்ற கட்டிகள். தீங்குள்ள கட்டிகள்.
இந்தத்தீங்குள்ள கட்டிகள், தொண்டை, நுரையீரல், கல்லீரல், இரப்பை குடல்போன்றவற்றில் வளர்கின்றன. இவைமிகவும் தீங்கானவை. ஆனால், தீங்கற்ற கட்டிகள், நரம்புக்கட்டி, இழைமக் கட்டி கொழுப்புக்கட்டி, போன்றவை மெதுவாக வளரக்கூடியவை. இவை பிற உறுப்புகளுக்கு பரவாததால் இவற்றால் இடர் இல்லை. ஆனால் தீங்கற்ற கட்டிகளில் புண்ணாவது, நெறிகட்டுவது, திடீரென்று வளர்வது, அழற்சி அசைவில்லாமல் இருப்பது போன்றவை இருந்தால் அவை பற்று நோயின் தொடக்கமாகக் கூட இருக்கலாம் என்பதனை உணரவேண்டும்.
புற்று நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில்.....
1.அறுவை மருத்துவம்.
2.கதிரியக்க மருத்துவம்.
3.வேதியல் மருத்துவம்.
4.இயக்குநீர் (ஹார்மோன்)மருத்துவமுறை.
5.நோயெதிர்ப்பு மருத்துவ முறை.
போன்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.நேர் (அலேபதி) மருத்துவ முறையில் வேதியல் மருத்துவ முறையில், வேதியல்பொருட்களைப் பயன் படுத்துகிறார்கள். இவற்றை தனியாகவோ அல்லது சேர்த்தோ பயன்படுத்துகிறார்கள். இவற்றைப் புற்று நோய்க் கலங்களை (ஊநடடள) அழிக்கக் கொடுப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும். ஆனால் இதில் பின் விளைவு என்னவென்றால், இவை நல்ல இழமையங்களையும், (வளைளரந) எலும்பின் உள் இழை மங்களையும், அழிக்கின்றன. இதனால் தீர்க்க முடியாத பின் வினைவுகள் ஏற்படுகின்றன. மேலும் நேர் மருத்துவ முறையில், தொடக்க காலத்திலேயே புறு;று நோயைக் கண்டுபிடித்தால் மட்டுமே குணப்படுத்து முடியும். முற்றிய புற்று நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். முழுவதும் குணமாக்க முடியாது. வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து காப்பாற்ற மட்டும் தான் முடியும்.
நோயெதிர்ப்பு மருத்துவம் இன்னும், ஆய்வு அளவிலேயே உள்ளது. முழுவதும் இன்னும் சரிவர வளர்ச்சியடையவில்லை. ஆனால் மேற்கூறிய எந்த நேர் (அலேபதி) மருத்துவ முறையினாலும் நோயை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்த இயலாது.
மாற்று (ஹோமியோபதி) மருத்துவம்.
மாற்று மருத்துவத்தில்(ஹோமியோபதி)ஆற்றல் மிக்க மருந்துகள் புற்றுநோய் கலங்களை, அழிப்பதோடு மட்டுமல்லாது பரவாமலும் தடுக்கின்றன. இதனால் நோய் பக்கத்திலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும், பரவுவது தடுக்கப்படுகிறது. கலங்கள் அழிந்தவுடன் புதுக்கலங்கள், அழிந்தவுடன் புதுக்கலங்களையும், இம்மருந்துகள், உண்டாக்குகின்றன. எனவே தான் வரும் முன்னர் தடுப்பதிலும், வந்த பின்னர் குணப்படுத்துவதிலும், இம்மருந்துகள் முன்னணியில் நிற்கின்றன. மக்கள், புற்றுநோய் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். பொதுவாக நாள்பட்ட தொந்தரவும் திடீரென்று உடல் நிலையில் மாற்றமும், தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, மிகக் குறைந்த விலையில், எளிதில் கிடைக்கக் கூடிய இம்மருந்துகளை சாப்பிட்டால் நோயிலிருந்து மீண்டும் வாழ்க்கையைத் தொடரலாம்.